நடிகை விஸ்ணு பிரியா யாரை திருமணம் செய்து கொண்டார் தெரியுமா?


Image result for actor vishnu priya husband
தமிழில் செல்வா இயக்கிய ‘நாங்க’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. புதுமுகங்கள் தேவை என்ற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் ஸ்பீடு டிராக் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். ராத்திரி மழா, மகர மன்சு, கிரைம் ஸ்டோரி, பெண் பட்டினம், நாட்டி பிரபொசர், காட்ஸ் ஓன் கண்ட்ரி உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மலையாள டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். விஷ்ணுபிரியா பரதநாட்டியம் கற்றவர். மேடை நிகழ்ச்சிகளில் பரதநாட்டியம் ஆடி வருகிறார். விஷ்ணுபிரியாவுக்கும், பிரபல மலையாள இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்க்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இவர்கள் திருமணம் ஆழப்புழையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். நடிகைகள் பாமா, சுருதி லட்சுமி, இயக்குனர் சித்திக் உள்பட பலர் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்று விஷ்ணுபிரியா அறிவித்து உள்ளார்.

No comments

Powered by Blogger.