சீரியலில் நடக்கும் அநியாயம். வெளுத்து வாங்கிய பாண்டிய ஸ்டோர்ஸ் நடிகை முல்லை

Image result for பாண்டியன் ஸ்டோர் முல்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலம். அதிலும் குறிப்பாக முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா அதிகம் பேரை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் ஒரு முக்கிய விஷயம் பற்றி கோபமாக பேசியுள்ளார். "பல சீரியல்களில் தமிழ் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் கேரளா, கர்நாடகா என வேறு மாநில பெண்களை வெள்ளையாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ் சீரியல்களில் நடிக்க வைக்கிறார்கள்"

"நான் ரொம்ப கலர் கிடையாது, டஸ்கி கலர்தான். ஆனா, இதுவும் அழகுதானே?! நம்ம ஆளுங்க ஏன் வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரியல." என சித்ரா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துளளார்.

No comments

Powered by Blogger.