மக்களுக்கு பாதுகாக்கும் போலீஸ், இந்த வேலையை செய்யலாமா நீங்களே பாருங்க!
சென்னையில் பேன்சி ஸ்டோரில் போலீஸ்காரர் ஒருவர் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ஆசிக் என்பவர் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த 19ஆம் தேதி, இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், வெளியே அடுக்கி வைத்திருந்த பள்ளி மாணவர்களுக்கான பை ஒன்றை எடுத்துச் சென்று விடுகிறார். இது தொடர்பாக காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் ஆசிக், இந்த காட்சியை தனது நண்பர்கள் வாட்ஸ் ஆப் குழுவுக்கு அனுப்பினார்.
இந்த வீடியோவை பார்த்த, ஒருவர் ஆசிக் கடைக்கு வந்து, வீடியோவில் இருப்பது தனது நண்பர் வினோத் எனவும், அவர் காவலராக பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் குடிபோதையில் திருடியதாக ஒப்புக் கொண்ட காவலர் வினோத், தான் திருடிச் சென்ற பைக்கான பணத்தை கொடுத்து விட்டார்.
Leave a Comment