தளபதி விஜய் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் விஜய்!
சென்னை: விஜய் ரசிகர்கள் எல்லோரும் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லவும், தளபதி 63, பர்ஸ்ட் லுக், டைட்டில் அப்டேட்டுக்காக காத்துக்கிடக்கும்போது, அஸ்வின் இதில், முந்திக் கொண்டுள்ளார். ஆமாங்க.. நமது கிரிக்கெட் வீரர் அஸ்வின்தான் அது. இன்று காலை விடிஞ்சதுமே, சட்டுன்னு டிவிட்டர் வந்து பளிச்சின்னு ஒரு ட்வீட் போட்டார்.
அஸ்வின் என்ன சொல்றாருன்னா, "காலையிலேயே ரேடியோ கேட்டேன். தளபதி பிறந்தநாள் மற்றும் சென்னை மழை ரெண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. விஜய்க்கு முன்கூட்டியே பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வீக்என்ட் மழைக்காக சென்னைக்கும் வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.
மழையையும், விஜய் பிறந்த நாளையும், இணைத்து, அஸ்வின் ட்வீட் போட்ட பிறகு சும்மா இருப்பார்களா, ரசிகர்கள், மழையில் விஜய் தோன்றும் காட்சிகளை பதிலுக்கு அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Leave a Comment