நடிகர் சங்க தேர்தலில் விஜய் ,சூர்யா வாக்களிப்பு .
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள், நடிகைகள், நாடக கலைஞர்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 11.30 மணி நிலவரப்படி 815 வாக்குகள் பதிவாகியுள்ளது.
2019-2022ம் ஆண்டுக்கான நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் தொடங்கியது. நாசர் தலைமையில் பாண்டவர் அணி, கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகின்றன. மொத்த வாக்குகள் 3,644. இதில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் எண்ணிக்கை 3,171. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
தளபதி விஜய்
நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஜய் தனது வாக்கைப் பதிவு செய்தார். சென்னை மயிலாப்பூரில் உள்ள மையத்தில் நடிகர் விஜய் வாக்களித்தார்.
நடிகர் நாசர்
சட்டப்படி தேர்தல் நடைபெற்று வருகிறது, கால தாமதத்திற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு விட்டது என்று நடிகர் நாசர் விளக்கம் அளித்துள்ளார். ரஜினிக்கு தபால் வாக்கு காலம் தாழ்ந்து சென்றதற்கு வருத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விஜயகுமார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்த்தாய் நடிகர் சங்கம் என்று மாற்ற நடிகர் விஜயகுமார் கோரிக்கை வைத்துள்ளார். நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தப்பின் பேட்டியளித்த நடிகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சைக்கிளில் வந்து வாக்களித்த ஆர்யா
தேர்தல் நேரத்தில் நடிகர் சங்கத்தில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறியது வேடிக்கையானது என நடிகர் ஆர்யா கூறியுள்ளார். நடிகர் சங்கத் தேர்தல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.
நடிகர் ஷியாம்
நடிகர் சங்கம் என்பது ஒரு குடும்பம், தேர்தல் நேரத்தில் மட்டுமே இரு பிரிவு, தேர்தலுக்கு பிறகு ஒரு அணியாக செயல்படுவோம் நடிகர் ஷியாம் தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியினர் சில விவகாரங்களில் பொறுப்புணர்வு இன்றி உள்ளனர் என்றும் அது குறித்து கேள்வி கேட்டால் பதிலளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நல்லது செய்பவர்கள் ஜெயித்து வர வேண்டும், மூத்த கலைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் - நடிகை வெண்ணிறாடை நிர்மலா
வெற்றி வாய்ப்பு எங்களுக்கு பிரகாசமாக உள்ளது, தேர்தல் அறிக்கையில் நல்ல திட்டங்களை சேர்த்துள்ளோம் - நடிகர் பிரசாந்த்
Leave a Comment