தண்ணீர் இன்றி தவித்த தமிழகம் கேரளா முன் வந்த போது அதனை மறுத்து விட்ட தமிழகம்
தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க கேரளா முன்வந்ததை தமிழக அரசு ஏற்கவில்லை என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு திருவனந்தபுரத்தில் இருந்து ரயில்கள் மூலம் தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க தயார் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக, தமிழக முதல்வர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேரள அரசு கேட்டபோது, சாதகமாக பதில் அளிக்கவில்லை என்று ஃபேஸ்புக் பக்கத்தில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
Leave a Comment