BIGG BOSS வீட்டிற்கு நுழையும் பிரபலமான நடிகர்
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியான புரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், ஜூன் 23-ம் தேதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து நடிகை மதுமிதா கலந்து கொள்ள இருப்பதும் உறுதியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முதல் 2 போட்டியாளர்கள்!
அதனை தொடர்ந்து பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை பாடகர் ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில் இம்முறையும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நடிகர் ராதா ரவியும் சேரனும் பங்கேற்பாளர்களாக கலந்து கொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. எனினும் இது தொடர்பாக தொலைக்காட்சி நிர்வாகம் எந்த தகவல்களையும் கூறவில்லை.
ராதாரவி சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து கருத்து கூறி சர்ச்சைக்கு உள்ளானர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Comment