பழனியில் தல அஜித்

Image result for ajith latest images
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளார் அஜித்.

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகளான டப்பிங் பணிகள் ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகின்றன். இதில் அஜித் தனது டப்பிங் பணிகளை இரவு நேரங்களில் வந்து பேசிச் செல்கிறாராம்.

நேர்கொண்ட பார்வை படத்தை சீனாவிலும் ரிலிஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.